Wednesday, March 23, 2005

சுய ஆறுதலுக்காக

தைத் திருநாள்தான் எனக்குப் (தமிழர்) புத்தாண்டு. அன்று எழுதிய கவிதை சில தவறுகளுடன் வெளிவந்தபோது வருந்தினேன் (இங்கு அல்ல). ஆகவே என் சுய ஆறுதலுக்காக இதோ இங்கே இப்போ!

புது வருடம். . .
சோலைக்குயில்கள் கீதம்பாடித்
துயிலெழுப்ப
காலைக் கதிரவன் கிழக்குவாசல்
வரக்கண்டு
வான்மேகம் செவ்வர்ணம்
பூசி நிற்க
நீலக் குயில்கள் நீண்டதொரு
வாழ்த்திசைக்க
சின்னப்பறவைகள் அணிவகுப்பென
சிறகடிக்க
நாள் ஒன்று விடியும் - இப்படி
முன்றரை நூறுகளில் வருடமாய் நிறையும்
 

மறுபடி
நாளையும் விடியும்!
விடிகிற விடிவு எமக்கெல்லாம்
விடிவைத் தரும் விடியலாய் விடியட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

5 comments:

கறுப்பி said...

ம்.. கவிதை நல்லா இருக்கெண்டு பொய் சொல்ல மாட்டன்

எல்லாளன் said...

கருத்துச் சொல்லத் தூண்டியது வரைக்கும் சந்தோசம்!
அது சரி,அதென்ன எதற்கெடுத்தாலும் ஒரு ம்...!

கறுப்பி said...

ம்.. தற்போதுதான் சோபாசக்தியின் "ம்" கிடைத்தது அதன் தாக்கமாக இருக்கலாம

கறுப்பி said...

I Love you raji he he

Sorry about that எல்லாளன்.

Anonymous said...

உள்வீட்டுப் பிரச்சனை இப்ப வெளி வீடுகளிலும் நடக்கிறது
நடத்துங்கோ நடத்துங்கோ!